மாயவரத்துக்கு அருகில் உள்ள குத்தாலத்துக்கு வடமேற்கே 10 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. திருவிடைமருதூரிலிருந்து கஞ்சனூர் வழியாகவும் செல்லாம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். கயிலாயத்தில் உமாதேவியார் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது தான் வந்ததை கவனிக்காததால் சிவபெருமான் கோபமுற்று உமாதேவியாரை பசுவாகப் போகுமாறு சபித்தார். அவர் கோபத்தில் உதைத்த பந்து விழுந்த இடம் பந்தணைநல்லூர் என்று பெயர் பெற்றது. உமாதேவியார் பசு வடிவில் பூசித்த தலம். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சி அளிக்கின்றனர். |